வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை வலியுறுத்தி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு பதாகைகள், விளக்கப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், வாக்காளர் உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டு தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உறுதியளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள், தோட்டக்கலைத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment